News August 11, 2024
டோல்கேட்டில் இலவச அனுமதி தர கோரிக்கை

நாகை மக்களவை உறுப்பினர் வை.செல்வராஜ் நேற்று மாலை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில், ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு அனைத்து டோல்கேட்டுகள் வழியாக இலவசமாக பயணிக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
Similar News
News August 16, 2025
வேளாங்கண்ணி – முன்பை இடையே சிறப்பு ரயில் இயக்கம்

வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு மும்பை லோக்மான்ய திலக் ரயில் நிலையத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு வரும் ஆக.26 மற்றும் செப்.7 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதுபோல வேளாங்கண்ணியில் இருந்து மும்பைக்கு ஆக.28, செப்.9 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
News August 16, 2025
நாகையில் நிலம் வாங்குவோர் கவனத்திற்கு

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. ஆனால், அந்த கவலை இனி வேண்டாம். நிலத்தின் மீது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி அறிய <
News August 16, 2025
50% மானியம்: நாகை கலெக்டர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் கீழையூர் மற்றும் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த ஏழை விவசாயிகளின் சினையுற்ற கறவை பசுக்களுக்கு 50% மானியத்துடன் ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயனடைய தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.