News August 11, 2024
பொன்.மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்கு பதிவு

சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றிய போது பொன்.மாணிக்கவேல் சர்வதேச சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷுக்கு உடந்தையாக இருந்து சதி செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
Similar News
News November 9, 2025
சென்னை மெட்ரோ பயணிகளுக்கு GOOD NEWS!

சென்னை மெட்ரோ பயணிகளின் வசதிக்காக ‘வீட்டு வாசலில் மெட்ரோ’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 11 நிலையங்களை இணைத்து, 220 புதிய மின்சார மைக்ரோ பேருந்துகள் 5 நிமிடத்திற்கு ஒருமுறை இயக்கப்படும். ‘சென்னை ஒன்’ செயலி மூலம் பேருந்தைக் கண்காணிக்கலாம், டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News November 9, 2025
வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி; சென்னையில் முகாம்

வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு தடுப்பூசி, சிப் பொருத்துவதை சென்னை மாநகராட்சி கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று (நவ.09) பல்வேறு பகுதிகளில் காலை 8 முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. வரும் 16, 23ம் தேதிகளில் முகாம் நடைபெறும் நிலையில், தடுப்பூசி செலுத்தாத நாய் உரிமையாளர்களுக்கு வரும் 24ம் தேதி முதல் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.
News November 9, 2025
சென்னை: ஆதார் அட்டையில் முகவரி மாற்ற எளிய வழி!

ஆதார் கார்டில் இனி நீங்களே முகவரியை அப்டேட் செய்யலாம். 1.முதலில் <


