News August 11, 2024

முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

image

தமிழகத்தில் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் முதல்வர், அவரது மகன் மற்றும் கள்ளக்குறிச்சி எஸ்.பி., ஆகியோரை சுட்டு கொல்வேன் என விக்ரமன் என்பவர் பெயரில் கொலை மிரட்டல் கடிதம் கள்ளக்குறிச்சி எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தது. இதை விசாரித்த காவல்துறையினர், முன்விரோதம் காரணமாக விக்ரமன் பெயரில் மிரட்டல் கடிதம் அனுப்பிய தஞ்சாவூரை சேர்ந்த கோட்டீஸ்வரன் என்பவரை கைது செய்து கள்ளக்குறிச்சி கொண்டு வந்துள்ளனர்.

Similar News

News December 26, 2025

கள்ளக்குறிச்சியில் 3200 போலீசார் குவிப்பு!

image

கள்ளக்குறிச்சிக்கு இன்று (டிச.26) தமிழ்நாடு முதலமைச்சர் வருகையையொட்டி, வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில், 3200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டி.ஐ.ஜி உமா தேவராணி, 10 காவல் கண்காணிப்பாளர்கள், 10 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 30 டி.எஸ்.பி மற்றும் 80 காவல் ஆய்வாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

News December 26, 2025

கள்ளக்குறிச்சி:இரவு நேர ரோந்து பணி விவரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (டிச.25) இரவு முதல் நாளை (டிச.26) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News December 25, 2025

கள்ளக்குறிச்சி:வாஜ்பாய் படத்திற்கு மரியாதை செலுத்திய பாஜகவினர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம் அருகே,மறைந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாயின் 101 வது பிறந்த நாள் அனுசரிக்கப்பட்டது.இந்த விழாவில் நகர தலைவர் ராஜாஜி தலைமையில் நடைபெற்றது. இன்று (டிச.25) பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலிவரதன், மாவட்ட பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

error: Content is protected !!