News August 11, 2024
நீதி கேட்டு போராடியவர்கள் மீது வழக்கா?: அன்புமணி

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு போராடிய அவரது மனைவி, குழந்தை உள்பட 1500க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு தொடர்வது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். CBI விசாரணை கோரி போராடியவர்கள் மீது வழக்கு தொடர்ந்திருப்பது அதிகார அத்துமீறல் எனவும், இது காவல்துறையின் எந்திரத்தனமான செயல்பாட்டை காட்டுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், வழக்கை திரும்பப் பெறவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News December 24, 2025
விழுப்புரம்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

விழுப்புரம் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.
News December 24, 2025
திமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி இணைந்தது

நமது மக்கள் முன்னேற்றக் கழகம்(நமமுக) திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. ஸ்டாலினை நேரில் சந்தித்த அக்கட்சியின் நிறுவனர் ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்ட நிர்வாகிகள் 2026 தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடுவதாக உறுதி அளித்தனர். அக்கூட்டணியில் ஏற்கெனவே காங்., விசிக, மதிமுக, இடதுசாரிகள், IUML, மநீம உள்ளிட்ட 16 கட்சிகள் உள்ள நிலையில், நமமுகவும் இணைந்தது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. உங்க கருத்து?
News December 24, 2025
பறவை காய்ச்சல்: எல்லைகளில் உஷார் நிலை!

கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வேகமாக பரவி வருவதால், பாதிப்புள்ள பகுதிகளில் கோழி, முட்டை, காடை, வாத்து ஆகியவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக-கேரள எல்லைகளில் கோழிகள், இறைச்சிகளை ஏற்றி வரும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதோடு, தமிழக கோழிப் பண்ணைகளிலும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


