News August 10, 2024
பாலாற்றில் நீரில் மூழ்கி சிறுமி பலி

பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பாலாற்றில் தன் அக்காவுடன் குளிக்க சென்ற 8 வயது சிறுமி திவ்யா நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். இது குறித்த தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றுள்ளனர். நாளை பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News August 19, 2025
வேலூரில் டிகிரி இருந்தால் வங்கி வேலை…

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள Customer Service Associate பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. மொத்தம் 10,277 காலியிடங்கள் உள்ளன. அதில், தமிழகத்தில் மட்டும் 894 பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு முடித்தவர்கள் நாளை மறுநாளைக்குள் (ஆகஸ்ட் 21) <
News August 19, 2025
வேலூர் மாவட்ட அரசியல் கட்சி நீக்கம்

2019ஆம் ஆண்டிலிருந்து கடந்த 6 ஆண்டுகளாக நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், இடைத்தேர்தலில் போட்டியிடாத வேலூரை சேர்ந்த ‘டாக்டர் அம்பேத்கர் பீப்பிள் ரெவலூசன் மூவ்மென்ட்’ கட்சியினை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பதிவிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்சி சார்பில் விளக்கம் அளிக்கவில்லை என்றால் நீக்கப்படும் என மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News August 19, 2025
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (ஆகஸ்ட்-18) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 80 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் எச்சரித்துள்ளார்.