News August 10, 2024

உதயநிதி துணை முதல்வரானால் இதுதான் நடக்கும்

image

உதயநிதிக்கு துணை முதலமைச்சராக சுபமுகூர்த்தம் குறித்து விட்டதாக தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். உதயநிதி துணை முதலமைச்சராக ஆகிய பின் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடாது, கள்ளச்சாராய ஆறு தான் ஓடும் என கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். மதுரையில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், திமுக ஆட்சி சாதிக்கவில்லை என்றும் சறுக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 3, 2025

மதுரையில் குண்டாசில் வாலிபர் கைது

image

மதுரை கோ. புதூர் அண்ணா நகரை சேர்ந்த பாப்பையா (30) இவர் வழிப்பறி செய்யும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்பான வழக்குகளில் கைதான இவர் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இவரை போலீசார் கண்காணித்தனர் அப்போதும் அவர் குற்ற செயல்களை தொடர்வது உறுதியானது. அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். போலீசார் பாப்பையாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News November 3, 2025

மதுரையில் பூக்களின் விலை கடும் உயர்வு

image

மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகின்றன, கடந்த சில நாட்களாக பூக்களின் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்து காணப்படுகிறது, மல்லிகை ரூபாய் 800 முதல் 1000 வரை, பிச்சி கிலோ ரூபாய் 500 முதல் 600, செவ்வந்தி கிலோ 150 முதல் 200, முல்லை ரூபாய் 600 முதல் 700 வரை, கனகாம்பரம் 1000 முதல் 1200 வரை விற்பனையாகி வருகிறது.

News November 3, 2025

மதுரையில் மக்கள் சாலை மறியல்

image

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அசோக் நகர் பாக்கியநாதபுரம் ஆகிய பகுதிகள் மதுரை மத்திய தொகுதிகளின் கீழ் வருகின்றன. இந்த பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பாதாள சாக்கடை கழிவுநீர் சாலைகளில் வெளியேறி பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!