News August 10, 2024
கேரள அரசுக்கு உறுதி அளித்த பிரதமர்

கேரள அரசுக்கு மத்திய அரசு துணை நிற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், சம்பவம் நடந்த உடனே கேரள CM உடன் பேசியதாகவும், NDRF, SDRF, ராணுவம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் உடனே செய்ததாகவும் கூறினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருப்பதாக கூறிய அவர், பணத்தால் எந்த பணிகளும் தடைப்படாது என உறுதி அளித்தார்.
Similar News
News January 19, 2026
வீட்டில் இதையா யூஸ் பண்றீங்க?

காய்கறிகள் நறுக்க பலரும் பிளாஸ்டிக் கட்டிங் போர்டு பயன்படுத்துகின்றனர். ஆனால், இது நல்லதல்ல என்கின்றனர் டாக்டர்கள். காய்கறிகளை நறுக்கும்போது, கத்திமுனை பட்டு போர்டு சேதமடைவதுடன், அப்போது உதிரும் பிளாஸ்டிக் துணுக்குகள் உணவில் கலக்கின்றன. மேலும், போர்டில் பாக்டீரியாக்கள் வளர்வதால், அவை நோய்களை உண்டாக்குகின்றன. இதனால் ஹார்மோன் பாதிப்பு, உடல்பருமன், கேன்சர் வரும் ஆபத்து அதிகரிக்கிறது.
News January 19, 2026
ஜான் ஆரோக்கியசாமி கைதா? தவெக மறுப்பு

கரூர் துயர வழக்கில் விஜய்யிடம் CBI கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், தவெக பொதுக்கூட்டம், மாநாட்டிற்கு வெளிநாடுகளில் இருந்து பல கோடி நிதி பெற்றதாக NIA-க்கு ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தவெக ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியிடம் இன்று, CBI விசாரணை நடத்தவிருப்பதாகவும், விசாரணை முடிவில் அவர் கைதாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இதனை தவெக தரப்பு மறுத்துள்ளது.
News January 19, 2026
தொடரும் ஆம்னி பஸ் கட்டண கொள்ளை: நயினார்

நெல்லையில் இருந்து சென்னை வர ஆம்னி பஸ்ஸில் ஒருவருக்கு ₹7,500 வசூலிக்கப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியளிப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ் கட்டணம் விண்ணைத் தொடுவதும், கண் துடைப்புக்காக திமுக அமைச்சர்கள் கட்டண உயர்வை எச்சரிப்பதும் தொடர்கதையாகி வருவதாக அவர் விமர்சித்துள்ளார். மக்களின் பணம் சுரண்டப்படுவது நின்றபாடில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


