News August 10, 2024

திருவாரூர் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட 32 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, திருவாரூர், நன்னிலம், கூத்தாநல்லூர், மன்னார்குடி உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 12, 2025

திருவாரூர்: பறவைகளை வேட்டையாடிய இருவர் கைது

image

முத்துப்பேட்டை உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலய பகுதியான பள்ளியமேடு செல்லும் வழியில் வனக்காப்பாளர் பாரதி செல்வன் தலைமையில் வனத்துறையினர் நேற்று ரோந்து பணி மேற்கொள்ளும் பொழுது, அப்பகுதியில் பறவையை வேட்டையாடிய எடையூர் சங்கேந்தியைச் சேர்ந்த கோபி, ஜீவா ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து வனச்சரக அலுவலர் முன் ஆஜர் படுத்தி இருவருக்கும் தலா ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

News September 12, 2025

திருவாரூர்: முன்னால் அமைச்சர் ஆர்.காமராஜ் ஆலோசனை

image

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதி நன்னிலம் வடக்கு ஒன்றியத்தில் வேலங்குடி ஊராட்சியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னால் உணவுத்துறை அமைச்சருமான ஆர்.காமராஜ் கலந்துகொண்டு 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக நிர்வாகிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.

News September 12, 2025

திருவாரூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய தாய்மாமன்!

image

நன்னிலம் அருகே, திருவிடைமருதூரைச் சேர்ந்த 17 வயது சிறுமியை அவரது தாய்மாமன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அவரை 7 மாத கர்ப்பிணி ஆக்கி பின்னர் சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த நன்னிலம் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியின் தாய்மாமன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!