News August 10, 2024
நெல்லை மாவட்டத்திற்கு மழை

நெல்லை மாவட்டத்திற்கு இன்று (ஆக.10) இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், தேனி, மதுரை, நெல்லை, விருதுநகர், குமரி உள்ளிட்ட 32 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில், விவசாயிகள் சாகுபடி பணிகளை துவங்கியுள்ளனர்.
Similar News
News October 19, 2025
நெல்லை: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

நெல்லை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News October 19, 2025
நெல்லையில் அல்வாவுக்கு நீண்ட “கியூ”

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் நெல்லையில் அனைத்து வகையான தீபாவளி பொருட்கள் விற்பனை களை கட்டியுள்ளது. உலகப்புகழ்பெற்ற நெல்லை இருட்டுக்கடை அல்வா வாங்குவதற்கு வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நெல்லை ரத வீதியில் நீண்ட வரிசையில் நின்று அல்வா வாங்க மக்கள் காத்திருந்தனர். இதுபோல் அனைத்து இனிப்பு கடைகளிலும் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.
News October 19, 2025
நெல்லை: அக்.25 இளைஞர்களே MISS பண்ணாதீங்க!

நெல்லையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை நிறுவனங்கள் பங்கேற்கும் சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம் பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி வளாகத்தில் வருகிற 25-ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இதில் டாட்டா பவர் சோலார் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட காற்றாலை மற்றும் சூரியன் உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்ற 500க்கும் மேற்பட்ட வேலை நாடுகளில் தேர்ந்தெடுக்க பட உள்ளனர்.