News August 10, 2024
வருமான வரி கணக்கு REFUND பிரச்னையா?

வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்த சில நாள்களில், REFUND இருப்பின் அதுகுறித்து உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி வருமான வரித்துறை முதலில் தெரியப்படுத்தும். உடனடியாக அதன் இணையதளத்தில் சென்று கணக்கீடு சரிதானா என்பதை பரிசோதிக்கலாம். கணக்கீடு சரியில்லை என கருதினால், உடனடியாக பிரிவு 154ல் சரிபார்ப்பு கோரிக்கையை முன்வைக்கலாம். அது ஆய்வு செய்யப்பட்டு, பிழையிருப்பின் சரி செய்யப்படும்.
Similar News
News August 14, 2025
CM ஸ்டாலினுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

சுதந்திர தினத்தன்று CM ஸ்டாலின் கொடி ஏற்றும் போது, வெடிகுண்டு வெடிக்கும் என காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் மிரட்டல் விடுத்திருந்தார். இதுகுறித்து உடனடியாக தீவிர விசாரணை செய்த போலீசார் செங்கல்பட்டை சேர்ந்த கணேசன் என்பவரை கைது செய்தனர். தொழிலில் நஷ்டம் அடைந்த விரக்தியில், மது போதையில் அவர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
News August 14, 2025
CM தலைமையில் இன்று கூடும் அமைச்சரவை

CM ஸ்டாலின் தலைமையில் இன்று காலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய திட்டங்கள், தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தெரிகிறது. மேலும், ஆணவ படுகொலையை தடுப்பதற்கான புதிய சட்டங்கள் கொண்டுவருவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகள் செல்ல உள்ளதால் அது பற்றியும் ஆலோசிக்க வாய்ப்புள்ளது.
News August 14, 2025
துப்பாக்கியால் சுட்டு சுதந்திர தின கொண்டாட்டம்: 3 பேர் பலி

இன்று பாகிஸ்தானில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி லியாரி உள்ளிட்ட பல இடங்களில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாடியுள்ளனர். இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 64 பேர் படுகாயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர். இது தொடர்பாக 20-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே பலுசிஸ்தான் படை – பாக்., ராணுவம் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.