News August 10, 2024

400 கோழி, 55 ஆடு பலியிட்டு 2 நாள் கறி விருந்து

image

மேலூர் அருகே கல்லம்பட்டி முன்னமலை சுவாமி, ஆயி கருப்பன் சுவாமி கோயிலின் ஆடி மாத திருவிழா கடந்த 15 வருடங்களுக்கு பிறகு நடைபெற்றது. இதில் விரதம் இருந்த பெண் பக்தர்கள் மண்பானையில் தீர்த்தத்தை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்து பொங்கல் வைத்து, 400 நாட்டு கோழிகள் சமைத்து நேற்று விருந்து பரிமாறப்பட்டது. இன்று இதேபோல் 55 ஆடுகளை பலியிட்டு சமைத்து சாமிக்கு படையல் செய்து பொது கறி விருந்து நடைபெற்றது.

Similar News

News November 5, 2025

மதுரையில் சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா.?

image

மதுரை மக்களே, நீங்க வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 0452‑2604368, தொழிலாளர் இணை ஆணையர் – 0452‑2584266, தொழிலாளர் துணை ஆணையர் – 00452‑2601449 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க கண்டிபாக ஒருவருக்காவது உதவும்.

News November 5, 2025

மதுரை: சொல்பேச்சு கேட்காத மகன்கள்; தாய் விபரீத முடிவு

image

மதுரை ஆனையூர் வாகை­குளத்தை சேர்ந்­த­வர் விமலா (34). இவரது கண­வர் இறந்­து விட்ட நிலையில் இவ­ரது இரண்டு மகன்­களும் இவ­ரது பேச்சு மற்றும் அறிவுரைகளை கேட்­கா­மல் இருந்து வந்துள்ளனர். இதனால் மனமு­டைந்த அவர் நேற்று வீட்­டில் தூக்கு போட்டு தற்­கொலை செய்து கொண்­டார். இது குறித்து அலங்காநல்லூர் போலீசார் விசா­ரணை நடத்தி வருகின்­ற­னர். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News November 5, 2025

மதுரையில் இன்று இங்கெல்லாம் மின்தடை.!

image

மதுரை அழகர்கோவில் மற்றும் அச்சம்பத்து துணைமின்நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், அதன் சுற்றுவட்டார பகுதிகளான பொய்கரைப்பட்டி, நாயக்கம்பட்டி, அழகர் கோவில் கெமிக்கல்ஸ், கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, பூண்டி, தூயநெறி, தொண்டமான்பட்டி, மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி, ஆமாத்தூர்பட்டி, தேத்தாம்பட்டி மற்றும் மந்திகுளம் பகுதிகளில் இன்று (நவ.5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

error: Content is protected !!