News August 10, 2024
வேலூரில் ரூ. 55 லட்சம் மோசடி செய்த குடும்பத்தினர்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தாராபடவேடு பகுதியை சேர்ந்தவர் துணைவியாபாரம் செய்து வரும் மகாலட்சுமி. இவரிடம் தோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்த பாலு மற்றும் உமா என்கிற தம்பதியினர் இரட்டிப்பாக பணம் தருவதாக கூறி ரூ.55 லட்சம் வாங்கியுள்ளனர். ஆனால் அவர்கள் வாங்கிய பணத்தை திருப்பி தராததால் ஏமாற்றம் அடைந்த மகாலட்சுமி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
Similar News
News August 18, 2025
வேலூர்: IT வேலை ரெடி.. நீங்க ரெடியா.?

ஐடி நிறுவனத்தில் பணியாற்றி பிரேக் எடுத்துள்ள பெண்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ஜோஹோ சார்பில் மறுபடி எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தேர்வாகும் நபர்களுக்கு 3 மாத பயிற்சியுடன் பணி வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஆகஸ்ட் 22ம் தேதி கடைசி நாளாகும். ஆகஸ்ட் 23ம் தேதி நுழைவு தேர்வு நடைபெற உள்ளது. விண்ணப்பிக்க <
News August 18, 2025
வேலூர் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்

வேலூர் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 19) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்.
1.வேலூர் மாநகராட்சி செல்வ விநாயகர் திருமண மண்டபம் வேலப்பாடி,
2. எஸ்பி மஹால் சத்துவாச்சாரி
3. பாலாஜி திருமண மண்டபம் தெள்ளூர்
4. குமரன் மஹால் வேப்பம் பட்டு
5. பிஎஸ்ஆர் மஹால் பேரணாம்பட்டு
6. மகாதேவமலை கோயில் மண்டபம் காங்குப்பம் மனுக்களை அளித்து பயன் பெறலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 18, 2025
வேலூர்: மக்கள் நலவாழ்வுத் துறையில் வேலைவாய்ப்பு

வேலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக பணி நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்கள், வேலூர் மாநகராட்சியில் செவிலியர், லேப் டெக்னீசியன், பார்மாஸிஸ்ட், எம்எல்ஹெச்பி, ஹெல்த் இன்ஸ்பெக்டர், UHN, MPHW கணக்கு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆக.29ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் <