News August 10, 2024
புதுக்கோட்டையில் நாளை கனமழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை 11ஆம் தேதி அனேக இடங்களில் மழை பெய்யும் என்றும் வங்க கடலில் சூறைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வரை வீச கூடும், எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு “மஞ்சள் அலர்ட்” விடப்பட்டுள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 6, 2025
புதுகை: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3.ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இதனை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க…
News December 6, 2025
புதுக்கோட்டை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு

புதுக்கோட்டை மாநகராட்சி சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “புதுக்கோட்டை மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக விபத்துகளை ஏற்படுத்தும் விதத்தில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை உரிமையாளர்கள் உடனடியாக தங்கள் வீடுகளில் கட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இலையென்றால் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அபராதம் விதிக்கப்படும்.” என கூறப்பட்டுள்ளது
News December 6, 2025
புதுகை: தனியார் பள்ளி வேன் மோதி ஒருவர் பலி

தஞ்சாவூரை சேர்ந்தவர் விஜய் (25). இவருக்கும், புதுக்கோட்டை முதலிப்பட்டியைச் சேர்ந்த வெண்ணிலா (22) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் விஜய் நேற்று காலை முதலிப்பட்டியில் இருந்த மனைவி மற்றும் குழந்தையை பார்த்து விட்டு அவரது ஊருக்கு பைகில் சென்றபோது, தனியார் பள்ளி வேன் மோதியதில் உயிரிழந்துள்ளார்.


