News August 10, 2024
RTE: தனியார் பள்ளிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கல்வி உரிமை சட்ட இடஒதுக்கீட்டின்கீழ் கட்டாயம் 25% ஏழை மாணவர்களை சேர்க்க தனியார் பள்ளிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேல்முறையீடு மனு ஒன்றை விசாரித்த SC, “சிறந்த தனியார் பள்ளிகளில் படிக்கும் உரிமை ஏழை குழந்தைக்கு உண்டு. ஏழை குழந்தைகளுடன் பழகுவதால், இந்தியா குறித்த புரிதல் பணக்கார குழந்தைகளுக்கு கிடைக்கும். அவர்கள் சந்திப்பால், நல்ல தலைவர்கள் உருவாவர்” எனத் தீர்ப்பளித்தது.
Similar News
News November 4, 2025
மெஹுல் சோக்சியை நாடு கடத்துவதில் சிக்கல்?

நாடு கடத்தப்படுத்துவதற்கு எதிராக பெல்ஜியம் சுப்ரீம் கோர்ட்டில் மெஹுல் சோக்சி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த விசாரணை நடைபெறும் வரை, நாடு கடத்தப்படும் நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு வக்கீல் கென் விட்பாஸ் தெரிவித்துள்ளார். முன்னதாக, மெஹுல் சோக்சியை நாடு கடத்த ஆன்ட்வெர்ப் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. PNB வங்கியில் ₹13,000 கோடி கடன் வாங்கிவிட்டு அவர் பெல்ஜியம் தப்பி சென்றார்.
News November 4, 2025
பாத்ரூமில் பல்லி வருகிறதா?

பாத்ரூமில் பல்லியை பார்த்து அருவருப்போ பயமோ ஏற்படலாம். கவலை வேண்டாம். பல்லி வருவதை தடுக்க இதை செய்தால் போதும்: *பூண்டு, வெங்காயத்தை நறுக்கி அதில், கிராம்பு, மிளகு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். *அதனை வடிகட்டி திரவமாக பிரித்து, அதனுடன் டெட்டால் சேர்த்து, ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பிக் கொள்ளவும் *பல்லி அதிகமாக இருக்கும் இடத்தில் இதனை ஸ்ப்ரே செய்தால், பல்லிகள் இனி தலை காட்டாது. SHARE IT.
News November 4, 2025
கோவை சம்பவம்: போலீஸ் என்ன செய்கிறது? பிரேமலதா

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை பிரேமலதா விஜயகாந்த் வன்மையாக கண்டித்துள்ளார். விமான நிலையம் போன்ற முக்கியமான இடத்தில் இதுபோன்று நடக்கிறது என்றால் போலீஸ் என்ன செய்கிறது எனவும், CCTV கேமரா அனைத்து இடங்களிலும் செயல்படுகிறதா என்பதை அரசு ஆய்வு செய்யவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், குற்றவாளிகளை உடனே கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.


