News August 10, 2024
சேலம்: குழந்தையை கடத்திய பெண் அதிர்ச்சி வாக்குமூலம்

சேலம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தையை நேற்று கடத்திச் சென்ற காரிப்பட்டி பெண் வினோதினியை சேலம் மாநகர போலீசார், இன்று அதிகாலை கைது செய்த குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். வளைகாப்பு நடத்திய பிறகு தனது கர்ப்பம் கலைந்ததால், ஆண் குழந்தையை கடத்திச் சென்று தனது குழந்தையாக வளர்க்க இந்த பெண் திட்டமிட்டு செயல்பட்டது, போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Similar News
News November 11, 2025
சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

சேலம் வழியாக சபரிமலை மண்டலப் பூஜையை முன்னிட்டு ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக நரசப்பூர்- கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்களை (07105/07106] தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் நவ.16 முதல் ஜன.18 வரை நரசப்பூரில் இருந்து கொல்லத்திற்கும், வரும் நவ.18 முதல் ஜன.20 வரை கொல்லத்தில் இருந்து நரசப்பூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்கள் சேலத்தில் 3 நிமிடங்கள் நின்று செல்லும்.
News November 11, 2025
சார்லப்பள்ளி- கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

சேலம் வழியாக சபரிமலை சீசனை முன்னிட்டு சார்லப்பள்ளி-கொல்லம்-சார்லப்பள்ளி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் (07107/07108) இயக்கப்படுகின்றன. வரும் நவ.17 முதல் ஜன.19 வரை சார்லப்பள்ளியில் இருந்து கொல்லத்திற்கும், நவ.19 முதல் ஜன.21 வரை கொல்லத்தில் இருந்து சார்லப்பள்ளிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவித்துள்ளது.
News November 10, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்1. மாநகரப் பகுதியில் ஆதிசேஷ பெருமாள் கோவில் ரெட்டியூர் 2. நரசிங்கபுரம் நகராட்சி வார்டு 14, 15க்கு ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி 3. பூலாம்பட்டி பேரூராட்சி 9, 10, 11, 12, 13, 14, 15, மேம்பாறை சமுதாய கூடம் 4.ஓமலூர் செல்லப்பிள்ளை குட்டை, வீரபாண்டி அக்கர பாளையம் 5.மேச்சேரி கூணான்டியூர் பகுதிகளில் முகாம்கள் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.


