News August 10, 2024
புதுச்சேரிக்கு 10% நிதி உயர்த்தி வழங்க கோரிக்கை

சட்டப்பேரவையில் நேற்று (ஆக.09) கேள்வி நேரத்தின்போது பதிலளித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, மத்திய நிதி குழுவின் வரி பகிர்மானம் மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தாது என மத்திய அரசு கூறியுள்ளது. மத்திய நிதி ஆணைய மானிய சூத்திரத்தின் அடிப்படையில் மத்திய நிதி உதவியை நிர்ணயிக்கும் வரை புதுச்சேரிக்கு 10% நிதி உயர்த்தி வழங்க கேட்டு வருகிறோம் என்று பேசினார்.
Similar News
News December 15, 2025
புதுவை: மீன் அங்காடி திறப்பு விழாவில் முதலமைச்சர்

புதுச்சேரி நகராட்சி சார்பில், பொலிவுறு நகர வளர்ச்சி நிறுவனத்தின் நீடித்த வளர்ச்சிக்கான நகர்ப்புற திட்டத்தின் கீழ், மரப்பாலம் சலவை நிலைய கட்டிடம், வைத்திகுப்பம் சலவை நிலைய கட்டிடம், மரப்பாலம் நேதாஜி நகர், சுகாதாரமான மீன் அங்காடி ஆகியவற்றின் திறப்பு விழா மரப்பாலத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி கட்டிடங்களை திறந்து வைத்தார்.
News December 15, 2025
புதுச்சேரி: BE போதும் அரசு வேலை ரெடி!

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள Junior Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 64
3. வயது: 18-40 (SC/ST-45,OBC-43)
4. மாதச்சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
5. கல்வித் தகுதி: Diploma, Degree, B.E/B.Tech, LLB
6.கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News December 15, 2025
புதுச்சேரி: சிறையில் நீதிபதிகள் திடீர் ஆய்வு

புதுச்சேரி காலப்பட்டு மத்திய சிறையில், நீதிபதிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். புதுச்சேரி தலைமை நீதிபதி ஆனந்து, குற்றவியல் நீதிபதி ஏஸ்வந்தராவ், மாவட்ட சட்டபணிகள் ஆணைய நீதிபதி ரமேஷ் ஆகியோர் காலப்பட்டு மத்திய சிறையினை ஆய்வு செய்ய வந்தனர். தொடர்ந்து நீதபதிகள் சிறையின் அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தனர். சிறையில் அடிப்படை வசதிகளை பார்வையிட்டனர். தொடர்ந்து சிறை வாசிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.


