News August 10, 2024
சென்னையில் சிறப்பு ரயில்கள் இயக்கம்

வார இறுதியில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக இன்று இரவு 11 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லா MEMU சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விழுப்புரம், சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக காலை 6.40 மணிக்கு திருச்சி சென்றடையும். அதன்பின், வரும் 11ம் தேதி இரவு 10.30க்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு காலை 5.50க்கு தாம்பரம் வந்தடையும்.
Similar News
News November 4, 2025
சென்னை: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

சென்னை மக்களே வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். மேலும் இது தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 4, 2025
சென்னை மெட்ரவில் வேலை; இன்று நேர்முக தேர்வு

சென்னையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் 2ம் கட்ட திட்டத்தில் வேலை வாய்ப்பு நேர்முக தேர்வு இன்று நடைபெறுகிறது பல்வேறு பணிகளுக்கு சென்னையில் நவ ( 4-11-2025) முதல் தொடங்கி (7-11-2025) வரை நேர்முக தேர்வு நடைபெறுகிறது கோவையில் 10 மற்றும் 11ஆம் தேதிகளிலும், மதுரையில் 13, 14ஆம் தேதிகளில் நடைபெறும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News November 4, 2025
SIR: சென்னை வாக்காளர் கவனத்திற்கு

சென்னை வாக்காளர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு வந்துள்ளது. சென்னையில் இன்று 4-11-2025 முதல் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் அலுவலர்கள் தொகுதி வாரியாக ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் பெற 044-25619547 மற்றும் 1950 ஆகிய எண்களில் வாக்காளர்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே ஷேர் பண்ணுங்க.


