News August 10, 2024
கார் பந்தயத்திற்கு எதிராக அதிமுக வழக்கு

சென்னையில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1-ஆம் தேதி ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறவுள்ளது. இந்த கார் பந்தயத்திற்கு எதிராக அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக பட்டியலிடுமாறு உச்சநீதிமன்றத்தில் அதிமுக வலியுறுத்தியுள்ளது. இந்த கார் பந்தயத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 18, 2025
காவல் ஆணையரகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், காவல் ஆணையரகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காவல் துணை ஆணையாளர் G. சுப்புலட்சுமி தலைமையேற்றார். நிகழ்வில் V. V. கீதாஞ்சலி (மத்திய குற்றப்பிரிவு-II), உதவி ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
News September 18, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 17) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 17, 2025
வார இறுதி நாள் முன்னிட்டு சிறப்பு பேருந்து இயக்கம்

21ம் தேதி மகாளய அமாவாசையை முன்னிட்டு 20ம் தேதி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்தும் ராமேஸ்வரத்துக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கக்கப்படுகிறது கோயம்பேட்டில் இருந்து 19, 20ம் தேதிகளில் தலா 55 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வார இறுதி நாள்களை முன்னிட்டு 1,055 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்