News August 10, 2024

ஆண்களுக்கும் மாதம் ₹1000 உரிமைத்தொகை?

image

மகளிர் உரிமைத்தொகை போல், ஆண்களுக்கும் எதிர்காலத்தில் மாதம் ₹1000 உரிமைத்தொகை வழங்க வாய்ப்புள்ளதாக, அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார். ஆண்களுக்கும் உரிமைத்தொகை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளதாக குறிப்பிட்ட அவர், வரும் காலத்தில் அந்த ஏக்கத்தை தீர்த்து வைப்பதற்கான சூழல் வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் மகளிர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர்.

Similar News

News September 16, 2025

இறால் ஏற்றுமதி ₹25,000 கோடியளவில் பாதிப்பு

image

US-ன் 50% வரிவிதிப்பு இந்திய சந்தையை பெருமளவில் பாதித்துள்ளது. அந்த வகையில், ஆந்திராவின் கடல்சார் வணிகமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இறால் ஏற்றுமதிக்கான 50% ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டதால் ₹25,000 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு பொருளாதார தீர்வு காண வேண்டும் என்று, CM சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

News September 16, 2025

இதுபோன்ற பேச்சை பொன்முடி தவிர்த்திருக்கலாம்: HC

image

சைவ, வைணவ மதங்களை ஒப்பிட்டு, பெண்கள் பற்றி பொன்முடி அவதூறாக பேசியதை சென்னை HC தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. தற்போது இந்த வழக்கை முடித்துவைத்துள்ள HC, பொறுப்பான பதவியிலிருந்த பொன்முடி இதுபோன்ற பேச்சுக்களை தவிர்த்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. புகாரளித்தவர்களிடம் போலீஸார் முறையாக விசாரணை நடத்தியிருக்க வேண்டும் என்றும், அவருக்கு எதிராக தனிநபர் புகாரளிக்கலாம் எனவும் கூறியுள்ளது.

News September 16, 2025

ஜோடியாக சுற்ற 8 இடங்கள்

image

இந்தியாவில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்களில் ஜோடியாக செல்ல சில ஊர்கள் உள்ளன. அதில் சிறந்த 8 இடங்களை மேலே போட்டோக்களாக வழங்கி இருக்கிறோம். அனைத்தையும் பாருங்க. உங்க பேவரைட் சுற்றுலா ஸ்பாட் எது? நீங்கள் உங்க ஜோடியுடன் செல்ல விரும்பும் ஊர் எது? கமெண்ட்ல சொல்லுங்க. இதை உங்கள் ஜோடிக்கு share செய்து எந்த ஊருக்கு போகலாம்னு கேளுங்க?

error: Content is protected !!