News August 10, 2024

சுதந்திர தின கிராம சபை கூட்டம் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், வேப்பூர் ஆகிய 4 ஒன்றியங்களில் 121 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் ஆகஸ்ட் 15 அன்று காலை 11 மணியளவில் சுதந்திர தின விழா கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெறும் என்றும், ஊராட்சி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல் அறிவித்துள்ளார்.

Similar News

News November 5, 2025

பெரம்பலூர்: மினி பஸ்கள் இயக்க வாய்ப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் மினி பஸ்கள் இயக்க, 2 புதிய வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 3, 2025 அன்று அரசிதழில் வெளியான இந்த வழித்தடங்களில், பேருந்துகளை இயக்க விரும்புவோர் நவம்பர் 7-ம் தேதிக்குள் பரிவாகன் இணையதளம் வழியாக ரூ.1500 கட்டணம் மற்றும் ரூ.100 சேவை கட்டணம் என மொத்தம் ரூ.1600 செலுத்தி பெரம்பலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 5, 2025

பெரம்பலூர்: கார் மோதி ஒருவர் பலி

image

பெரம்பலூர், அயன்பேரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசரப் அலி (58). இவர் தனது ஸ்கூட்டரில் சொந்த வேலை காரணமாக திருமாந்துறை வரை சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அதேநேரத்தில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வீரண்ணன் (36) மற்றும் 4 பெண்கள் ஒரு காரில், திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, அயன்பேரையூர் பிரிவு சாலையில், அசரப் அலியின் ஸ்கூட்டர் மீது கார் மோதி, அசரப் அலி உயிரிழந்தார்.

News November 5, 2025

பெரம்பலூரில் போலி மருத்துவர் கைது!

image

எளம்பலூர் சாலையில் உள்ள உப்பு ஓடை பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (52). இவர் போலியாக மருத்துவம் பார்ப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சுகாதாரத்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் அக்குபஞ்சர், நேச்சுரோபதி, ஹோமியோபதி போன்ற பட்டய படிப்பு படித்துவிட்டு, ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலி மருத்துவர் ராஜேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!