News August 10, 2024
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6194 மாணவர்களுக்கு உதவிதொகை

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் திருப்புலிவனம் கிராமத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற தமிழ்ப் புதல்வன் திட்டத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான ஏ.டி.எம் கார்டை வழங்கினார். இதன் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6,194 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
குறிப்பாக இதில், அரசு கலை, அறிவியல் கல்லூரியில் படிக்கும் 2,632 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
Similar News
News August 9, 2025
காஞ்சிபுரம் வருகை தரும் துணை முதல்வர்

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க ஆக.13-ம் தேதி தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தரவுள்ளார். அப்போது, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை மற்றும் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
News August 9, 2025
காஞ்சிபுரம் மக்களுக்கு முக்கிய தகவல்

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அல்லது மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யும் முன் அதற்கான ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். வீடியோ, புகைப்பட ஆதாரங்கள், பொருளை வாங்கியதற்கான ரசீது, கடையின் முழுமையான முகவரி உள்ளிட்ட ஆதாரங்களோடு புகார் செய்யும்போது அதிகாரிகள் உரிய விசாரணை செய்து கடையின் மீது நடவடிக்கை எடுப்பார்கள். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க.
News August 9, 2025
காஞ்சிபுரம் மக்களுக்கு முக்கிய தகவல்

காஞ்சிபுரத்தில், பேருந்து நிலையங்கள், ஓட்டல்களில் உணவு பொருட்களை MRP விலையைவிட கூடுதல் விலை கொடுத்து வாங்கிருப்பீர்கள். அவ்வாறு விற்பது குற்றம். கூடுதல் விலைக்கு விற்பது, காலாவதியான தேதியை மாற்றுவது, அதன்மேல் வேறு ஸ்டிக்கரை ஒட்டுவது போன்றவற்றை கண்டால் FSSAI-க்கு 94440 42322 என்ற வாட்சப் எண்ணுக்கு புகார் செய்யலாம். அல்லது சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் செய்யலாம். <<17350652>>தொடர்ச்சி<<>>