News August 10, 2024
மதுரையில் 6 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய நபர்!

மதுரை எழுமலை பகுதியில் இன்ஸ்பெக்டர் சுப்பையா தலைமையில் போலீசார் நேற்று(ஆக.,9) ரோந்து சென்றனர். அப்போது மீனாட்சிபுரம் விலக்கில் பைக்கில் நின்றிருந்த பெரியகட்டளையை சேர்ந்த கணேசன்(45) என்பவரை சோதனை செய்ததில், அவரது பைக்கில் 6 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் கஞ்சாவையும், பைக்கையும் பறிமுதல் செய்தனர். காவல்துறை எவ்வளவு கிடுக்குப்பிடி போட்டும் எங்கிருந்து வருகிறது கஞ்சா?
Similar News
News August 29, 2025
மதுரை இளைஞர்களுக்கு குட் நியூஸ் உடனே விண்ணப்பிங்கள்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மரம் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு தொடர்பான பயிற்சி வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது இதன் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் பயிற்சி பெற 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
News August 29, 2025
மதுரை: தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தின் கீழ் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் தீபாவளி பண்டிகை மற்றும் பண்டிகை தொடர் விடுமுறை முன்னிட்டு எட்டு ரயில்களின் சேவையை ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் முன்பதிவு செய்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
News August 29, 2025
ஆவின் பொருட்களை விற்பனை செய்யும் முகவராக இணைய அழைப்பு

மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மதுரை ஆவின் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆவின் பாலகங்கள் மற்றும் ஆவின் அலுவலகங்களில் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும் ஆவின் பொருள்களை விற்பனை செய்ய விருப்பம் உள்ளவர்கள் உள்ளவர்களுக்கு முகவர்களுக்கு ஆவின் அழைப்பு விடுத்துள்ளது.