News August 10, 2024

திருச்சியில் முன்னாள் அமைச்சர் அழைப்பு

image

திருச்சி அதிமுக புறநகர் மாவட்ட கழக செயலாளர் பரஞ்சோதி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருகின்ற 12ஆம் தேதி தொட்டியம் ஒன்றிய முழுவதும் புதிய உறுப்பினர் கார்டு வழங்குதல் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இதில் மணமேடு, சீனிவாசநல்லூர், தோளூர்பட்டி, காடுவெட்டி உள்ளிட்ட பகுதிகளின் புதிய உறுப்பினர்களுக்கு கார்டு வழங்க உள்ளதால் மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Similar News

News December 30, 2025

திருச்சியில் அரசு பஸ் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

image

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளை சரிவர பராமரிக்காமல் விபத்துக்கு வழிவகுக்கும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாகத்தையும், திட்டக்குடி விபத்துக்கு ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்த தமிழக அரசையும் கண்டித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக சம்மேளனம் சார்பில் டிவிஎஸ் டோல்கேட்டில் உள்ள போக்குவரத்து கழக பணிமனை முன் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News December 30, 2025

திருச்சி: கோழி கொட்டகை அமைக்க 100% மானியம்

image

திருச்சி, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த MGNREGA திட்டத்தின் கீழ், கோழிக் கொட்டகை 100 % மானியத்துடன் கட்டித் தரப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இதில் பயன்பெற விரும்புவோர் தங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம். இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News December 30, 2025

பட்டா வழங்கல்: திருச்சி கலெக்டர் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் “நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் திட்டத்தில்” விண்ணப்பிக்க <>https://tamilnilam.tn.gov.in/citizen <<>>என்ற தளத்தை பயன்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். விண்ணப்பித்தவர்களுக்கு இணைய வழியில் நத்தம் பட்டா வழங்கப்படும். இ-சேவை மையம் மற்றும் சிட்டிசன் போர்டல் வாயிலாக பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!