News August 10, 2024

ஆக.11ல் நாகர்கோவில் நாய் கண்காட்சி

image

கன்னியாகுமரி கென்னல் கிளப் சார்பில் அகில இந்திய அளவில் அனைத்து வகை நாய் கண்காட்சி & சேம்பியன்ஷிப் போட்டி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி நடைபெறுகிறது. சேம்பியன்ஷிப் போட்டிகளுக்கு செர்பியாவை சேர்ந்த நெனாட் டேவிடோவிக், நடாசா டேவிடோவிக் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை குமரி மாவட்ட கென்னல் கிளப் செய்து வருகின்றது.

Similar News

News September 18, 2025

குமரி: EXAM இல்லா அரசு வேலை – APPLY….!

image

குமரி மக்களே தேர்வு இல்லாமல் அரசு வேலையை தவறவிடாதீர்கள் ! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது.10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 18, 2025

குமரி: காதலிக்காக மூதாட்டியிடம் நகை பறிப்பு

image

பள்ளியாடி ஜெபனேசரின் தாயார் ரெஜி(63) 2 நாட்களுக்கு முன்பு கழிவறையில் மயங்கி விழுந்தார். அவரது கழுத்திலிருந்த 11 பவுன் நகை திருடப்பட்டிருந்தது. தக்கலை போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து திருவட்டாரை சேர்ந்த ஆனந்த்(26) என்பவரை உண்ணாமலைக்கடையில் நேற்று கைது செய்தனர். இஞ்சினியரான ஆனந்த் வேலை கிடைக்காததால் பெயிண்டிங் வேலை பார்த்ததாகவும்,காதலிக்காக நகை பறித்ததாகவும் போலீசிடம் தெரிவித்துள்ளார். 

News September 18, 2025

குமரி: நடு ரோட்டில் பழுதாகி நின்ற லாரி

image

நாகர்கோவில் சவேரியார் சந்திப்பில் இருந்து செட்டிகுளம் செல்லும் பாதையில் லாரி ஒன்று நேற்று திடீரென்று பழுதடைந்ததால் லாரியை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். பின்னர் பழுதடைந்த லாரி கிரேன் மூலம் எடுத்து அப்புறப்படுத்தப்பட்டது.இதனால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

error: Content is protected !!