News August 10, 2024
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் ரூ. 2.52 கோடி மதிப்பில் வீட்டுமனை பட்டா மற்றும் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் மூலமாக தீர்வு காணப்பட்டு அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு தர்மபுரி பொறுப்பு அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேற்று(ஆக 9) வழங்கினார். இந்நிகழ்வில் கலெக்டர் சாந்தி, எம்பி மணி, மு. அமைச்சர் பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Similar News
News July 11, 2025
தர்மபுரியில் அரசு அலுவலர்களுக்கு ரூ.1,000 அபராதம்

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வருகின்றனர். இதை தடுக்க, மாவட்ட கலெக்டர் சதீஸ் உத்தரவின்படி, டிராபிக் போலீசார் 1,000 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர். *இதன்பிறகாவது ஹெல்மட் அணிவார்களா அதிகாரிகள்? உங்களுக்கு தெரிந்த அரசு அதிகாரிகளுக்கு பகிருங்கள்*
News July 11, 2025
தர்மபுரி மாவட்ட கல்வி அலுவலர் மாற்றம்

தமிழக கல்வித்துறையில் பணிபுரியும் மாவட்ட கல்வி அலவலர்கள் பணியிட மாறுதல் பெற்றுள்ளனர். அதன்படி, தர்மபுரி தொடக்க கல்வி அலுவலராக பணியாற்றிய எம்.சின்னமாது நிலகிரிக்கு மாற்றப்பட்டுள்ளார். தொடர்ந்து, அவருக்கு பதிலாக ராணிப்பேட்டை மாவட்ட இடைநிலை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த வி.விஜயகுமார் தர்மபுரிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இவர்கள் உடனடியாக பணியில் சேரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.SHARE IT
News July 11, 2025
தர்மபுரி: ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு

இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி புதிய விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காப்பீடு ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் வரையிலான செலவுகளை கவர் செய்யக்கூடியது. விபத்தில் உயிரிழந்தால் 100% காப்பீடு தொகை வழங்கப்படும். எலும்புமுறிவு ஏற்பட்டால் ரூ.25,000 வழங்கப்படும். இது குறித்து தெரிந்து கொள்ள தர்மபுரி மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகத்தை(04342260143) தொடர்பு கொள்ளுங்கள். <<17028204>>தொடர்ச்சி<<>>. ஷேர் பண்ணுங்க