News August 10, 2024
சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு 2024 -25ஆம் கல்வியாண்டு நாட்காட்டியில் 2 மற்றும் 4-ஆவது சனிக்கிழமை வேலைநாள் என அறிவிக்கபட்டிருந்தது. இதனை திரும்பப் பெற்று வேலை நாள் அறிவிப்பை ரத்து செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இதனால் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மட்டும் இன்றும் (ஆகஸ்ட்10), ஆகஸ்ட் 24-ஆம் தேதியும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 19, 2026
FLASH- சென்னை: இளைஞருக்கு அரிவாள் வெட்டு.. 3 பேர் கைது

சென்னை அடுத்த வேளச்சேரியில் ZEPTO ஊழியர் பார்த்திபன் என்பவரை வெட்டிக்கொல்ல முயன்ற 3 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். பார்த்திபன் என்பவரை வெட்டி கொலை செய்ய முயன்ற விஷ்ணு, சுந்தர், நந்தார் ஆகியோரை போலீசார் கைது செய்த நிலையில், எஞ்சிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். தீபாவளியன்று பார்த்திபன் தாக்கியதால் பழிக்குப்பழியாக மதுபோதையில் அரிவாளால் வெட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
News January 19, 2026
சென்னை: செவிலியர் பணிக்கு 999 பணியிடங்கள் அறிவிப்பு…

தமிழ்நாடு சுகாதார துறையில், செவிலியர் உதவியாளர் (தரம்-2) 999 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th & Nursing Assistants Course முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்.08-க்குள் இங்கு <
News January 19, 2026
இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அன்பில் மகேஷ் பதிலடி!

ஓய்வூதியத் திட்டம் குறித்தான இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார். அவர் இன்று (ஜன.19) கூறுகையில், “ஆட்சியில் இருந்த போது பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியை நிறைவேற்றாத பழனிசாமி, ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவதாகச் சொல்கிறார். ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாக பறித்து, அரசு ஊழியர் எதிர்காலத்தையே 2003-ம் ஆண்டில் சிதைத்த அதிமுக’ என்றார்.


