News August 10, 2024
நடவு நடும் பெண்களுடன் படம் எடுத்த சசிகுமார்

இயக்குநரும் நடிகருமான சசிகுமார் தனது வயலில் விவசாயம் செய்யும் படங்களைப் பகிர்ந்துள்ளார். பெரும்பாலும் கிராமங்கள் & மண் சார்ந்த கதைகளில் நடித்துள்ள அவர், விவசாயம் தொடர்பான விஷயங்களில் பெரிதும் ஈடுபாடு கொண்டவராகவே தன்னை வெளிப்படுத்தி வந்துள்ளார். தற்போது தனது வயலில் நடவு நடும் பெண்களுடன் நின்று கொண்டிருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து ‘எங்க வயலில் நடவு’ எனப் பதிவிட்டுள்ளார்.
Similar News
News August 13, 2025
சேலம்: VOTERS LIST-யில் பெயர் இருக்கா? உடனே CHECK

சேலம் மக்களே.., உங்கள் வாக்காளர் அடையாள எண்ணைக் கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
News August 13, 2025
தேர்தல் ஆணையத்தை நாடும் அன்புமணி

பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையத்தில் வழங்க அன்புமணி முடிவு செய்துள்ளார். சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில், அன்புமணியின் பாமக தலைவர் பதவி காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த பொதுக்குழு செல்லாது என்று ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், பொதுக்குழுவால் தலைவராக தேர்வானதை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையத்தை (EC) அன்புமணி நாடவிருக்கிறார்.
News August 13, 2025
அரிவாளை பார்த்ததும் கவின் ஓடினான்: சுர்ஜித் வாக்குமூலம்

நெல்லையில் கவினை ஆணவப்படுகொலை செய்த சுர்ஜித், அவனது தந்தை சரவணனிடம் தனித்தனியே சிபிசிஐடியினர் விசாரித்தனர். இதன்பின் கொலை நடந்த KTC நகருக்கு சுர்ஜித்தை அவர்கள் அழைத்து சென்றனர். அங்கு, கவினை கொலை செய்ய அரிவாளை எடுத்தபோது, தவறுதலாக கீழே விழுந்ததும், அதை பார்த்தவுடன் கவின் ஓடியதாகவும், பின்னர் துரத்தி சென்று வெட்டியதையும் சுர்ஜித் நடித்து காண்பித்தான். இதனை சிபிசிஐடியினர் வீடியோ பதிவு செய்தனர்.