News August 10, 2024

‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை இயக்கும் சுந்தர்.சி?

image

2020ஆம் ஆண்டில் RJ பாலாஜி இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன்’ படம் வெளியானது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அதன் 2ஆம் பாகத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அந்தப் படத்தை இயக்க சுந்தர்.சி ஒப்புக்கொண்டுள்ளதாகவும், முதல் பாகத்தில் அம்மனாக நடித்த நயன்தாராவே இதிலும் நடிப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Similar News

News December 23, 2025

EPS-க்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.. கசிந்தது தகவல்

image

தவெகவில் செங்கோட்டையன் இணைந்ததே அதிமுகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில், EPS தலையில் இடியை இறக்குவது போல் மற்றொரு தகவல் வெளியாகியிருக்கிறது. கொங்கு மண்டலத்தில் ஒருவர், டெல்டாவில் ஒருவர், சென்னையில் ஒருவர் என அதிமுகவின் 3 முக்கிய தலைகள் தவெகவில் இணையப்போவதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவருமே KAS-க்கு இணையான செல்வாக்கை கொண்டவர்கள் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. யாரா இருக்கும்?

News December 23, 2025

பள்ளிகளுக்கு விடுமுறை.. அரசு புதிய உத்தரவு

image

1-12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (டிச.24) முதல் அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது. விடுமுறை நாள்களில் ஸ்பெஷல் கிளாஸ் எதுவும் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. விடுமுறை என்பது மாணவர்களின் புத்துணர்ச்சிக்காகவே என்றும், அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி விடக் கூடாது எனவும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். விடுமுறையை ஜாலியாக கொண்டாடுங்கள் குழந்தைகளே! SHARE IT.

News December 23, 2025

ODI தரவரிசையில் சறுக்கிய ஸ்மிருதி!

image

இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ODI பேட்டிங் தரவரிசையில் 2-வது இடத்திற்கு சறுக்கியுள்ளார். SA-வின் லாரா வோல்வார்ட் 820 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேற, 811 புள்ளிகளுடன் ஸ்மிருதி பின்தங்கினார். மற்றொரு இந்திய வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ் 658 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் உள்ளார். அதே நேரத்தில, T20I பேட்டிங் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா 766 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் தொடருகிறார்.

error: Content is protected !!