News August 10, 2024
BIG BREAKING: வெண்கலம் வென்றார் அமன் ஷெராவத்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஆடவர் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 57 கிலோ எடைப் பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், போர்ட்டோ ரிக்கோ வீரர் டோரியன் க்ரூஸை 13 – 5 என்ற கணக்கில் வீழ்த்தி, வெண்கலப் பதக்கத்தை உறுதிசெய்துள்ளார். இதன் மூலம் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
Similar News
News September 16, 2025
மீனவர்கள் மீது திமுகவுக்கு அக்கறையில்லை: நயினார்

திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தொடர்ச்சியாக பாஜக விமர்சித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, மீனவர்களுக்கு 2 லட்சம் புது வீடுகள் கட்டித்தரப்படும் என சொன்னீங்களே, செஞ்சீங்களா என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். பல கோடி செலவில் பேனா சிலை அமைக்க ஆர்வம் காட்டும் திமுக, 4 ஆண்டுகளாக மீனவர்களுக்கென ஒரு வீடு கூட கட்டித்தரவில்லை என விமர்சித்துள்ளார்.
News September 16, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 16, ஆவணி 31 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 AM – 4:30 AM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: தசமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை.
News September 16, 2025
பணியிட அவமானத்தால் தற்கொலை: ₹90 கோடி இழப்பீடு

பணியிடத்தில் அவமானப்படுத்தியதால் தற்கொலை செய்த பெண்ணின் குடும்பத்தாருக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனம் ₹90 கோடி இழப்பீடு வழங்க ஜப்பான் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021-ல் சடோமி (25) என்ற பெண்ணை, நிறுவன தலைவர் தெரு நாய் என கூறி அவமானப்படுத்தியதால் அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அது தோல்வியில் முடிய, கோமாவில் இருந்த அவர் 2023-ல் உயிரிழந்தார். இதையடுத்து, அப்பெண்ணின் குடும்பத்தார் கோர்ட்டை அணுகினர்.