News August 10, 2024
கூட்டாட்சியை குழிதோண்டிப் புதைக்கும் பாஜக: சிபிஎம்

₹63,246 கோடிகள் மதிப்பிலான சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் மொத்த நிதி சுமையையும் தமிழக அரசே ஏற்க வேண்டுமென மத்திய அரசு கூறியிருக்கிறது. இதனை சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடுமையாக கண்டித்துள்ளார். பாஜக அரசின் இந்த செயலை கூட்டாட்சிக் கோட்பாட்டை குழிதோண்டிப் புதைக்கும் நடவடிக்கை என சாடிய அவர், நிதி ஒதுக்காமல் தமிழகத்தை வஞ்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டுமெனக் கூறியுள்ளார்.
Similar News
News January 10, 2026
தங்கம், வெள்ளி விலை.. இன்று ₹7,000 உயர்ந்தது

கடந்த 2 நாள்களாக குறைந்து வந்த வெள்ளி விலை, இன்று (ஜன.10) உயர்ந்துள்ளது. இதன்படி, 1 கிராம் ₹7 உயர்ந்து ₹275-க்கும், 1 கிலோவுக்கு ₹7,000 உயர்ந்து ₹2,75,000-க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், தங்கத்தின் விலையும் சவரனுக்கு ₹800 அதிகரித்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் தொடர்ந்து தங்கம் விலை ஏறுவதால், அடுத்தடுத்து விலை உயரவே வாய்ப்புள்ளது.
News January 10, 2026
ஜெ., காலத்தில் விஜய் கைகட்டி நின்றார்: சரத்குமார்

‘ஜனநாயகன்’ பட சென்சார் பிரச்னை குறித்து சரத்குமார் பேசியது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. விஜய் படத்திற்கு ஏற்கனவே இப்படி நடந்துள்ளது என்ற அவர், ஜெயலலிதா ஆட்சியிலும் இப்படி நடந்தபோது கைகட்டி ரோட்டில் நின்றவர் தானே விஜய் என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். எதை அரசியலாக்க வேண்டும், எதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதை அறியாமல் சிலர் உள்ளனர் என்றும் கூறினார். உங்கள் கருத்து என்ன?
News January 10, 2026
Govt Exam எழுதுறீங்களா? இதுல இலவசமா படிக்கலாம்

அரசு தேர்வுகளை எழுதுபவர்கள் சிலர் பணம் இல்லாததால் கோச்சிங் சென்டர்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே படிப்பர். உங்களுக்காகவே சில அட்டகாசமான இணையதளங்கள் இருக்கின்றன. அதில் நீங்கள் இலவசமாகவே படிக்கலாம். இதற்கு, examveda.com, sawaal.com, Indiabix.com, prepinsta.com போன்ற இணையதளங்களை செக் பண்ணுங்க. இதில், Mocktest, Reasoning, Notes என எல்லாமே கிடைக்கும். அனைவரும் பயனடையட்டுமே, SHARE THIS.


