News August 9, 2024
அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 12ஆம் தேதி போதை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு அதற்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமயில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் காவல்துறை, வருவாய் துறை, பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News October 23, 2025
தூத்துக்குடி இளைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் சார்பில் ஒப்பனை, அழகுக்கலை, பச்சை குத்துதல் போன்ற பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 8-ம் வகுப்பு படித்த 18 – 35 வரை உள்ள இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு www.tandco.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
News October 22, 2025
தூத்துக்குடியில் கோவிலில் திருடிய 3 பேர் கைது

தூத்துக்குடி அருகே சிலுவைப்ட்டியில் உள்ள ஒரு விநாயகர் கோவிலில் கடந்த 18-ம் தேதி கோவிலில் இருந்த வெண்கல மணி, குத்துவிளக்கு, பூஜை பொருள்கள் மற்றும் ரூ.20000 ஆகியவை திருடு போனது. இது தொடர்பாக தாளமுத்து நகர் போலீசார் விசாரணை நடத்தி அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி, பால விக்னேஷ், முகேஷ் ஆகிய மூன்று பேரை கைது செய்து திருடு போன பொருட்களை மீட்டனர்.
News October 22, 2025
கோவில்பட்டி: முதல்வர் ஸ்டாலின் வருகை ரத்து

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை மறுநாள்(அக்.24) கோவில்பட்டியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தையும், அங்கு அமைக்கப்பட்டிருக்கும் கருணாநிதியின் திருஉருவச் சிலையையும் திறந்து வைக்க வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக முதல்வரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.