News August 9, 2024
வேலைவாய்ப்புடன் பட்டப்படிப்பு படிக்க ஆட்சியர் அழைப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி, மேம்பாட்டு கழகம் மூலமாக 2022-23 மற்றும் 2023-24ஆம் ஆண்டுகளில் 12ஆம் வகுப்பு பயின்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தினருக்கு HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, திருச்சியைச் சேர்ந்த தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்தார்.
Similar News
News December 24, 2025
பட்டா வழங்கல்: திருச்சி கலெக்டர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் “நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் திட்டத்தில்” விண்ணப்பிக்க https://tamilnilam.tn.gov.in/citizen என்ற தளத்தை பயன்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். விண்ணப்பித்தவர்களுக்கு இணைய வழியில் நத்தம் பட்டா வழங்கப்படும். இ-சேவை மையம் மற்றும் சிட்டிசன் போர்டல் வாயிலாக பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
News December 24, 2025
திருச்சி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

திருச்சி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 24, 2025
திருச்சி அருகே விபத்தில் உடல் சிதறி பலி!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கல்லாமேடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேய உடல் சிதறி பலியானார். இதுகுறித்து தகவலறிந்த வளநாடு போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரிக்கும் போலீசார், அவர் மீது மோதிய வாகனத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.


