News August 9, 2024
வாழ்நாளில் பொன்னான நாள்: CM ஸ்டாலின்

மாணவர்களுக்குத் துணையாக, அவர்களது பெற்றோர் மட்டுமல்ல, தானும், தனது திராவிட மாடல் அரசும் பக்கபலமாக இருக்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வாழ்வில் சில நாள்கள் வரலாற்றில் நம்மை இடம்பெற வைக்கக்கூடியதாக அமையும் எனவும், அத்தகைய நாள், தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடங்கப்பட்ட இந்த பொன்னாள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 15, 2026
₹1,000 உரிமைத் தொகை.. முக்கிய அறிவிப்பு வந்தது

₹1,000 மகளிர் உரிமைத் தொகை இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை பெற்று வருபவர்கள், வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகையை பெற முடியாது என அரசு தெரிவித்துள்ளது. இந்த உதவித் தொகையானது தகுதிக்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகிறது. உரிமைத்தொகை மட்டுமல்லாது, வேறு எந்தவித உதவித்தொகை பெறுபவராக இருந்தாலும் வேலைவாய்பற்றோர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது.
News January 15, 2026
டெட் ரிசல்ட்டை உடனே வெளியிடுங்க: அன்புமணி

முதுநிலை ஆசிரியர் தேர்ச்சி பட்டியல், டெட் தேர்வு முடிவுகளை TRB உடனே வெளியிட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியம் நினைத்தால், இந்த தேர்வுகளின் முடிவுகளை ஒரே மாதத்தில் வெளிவிட்டு விட முடியும். ஆனால், தேர்வு நடந்து இரு மாதங்கள் ஆகியும், இதுவரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதற்கு முக்கிய காரணம், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அலட்சியமே என்று குற்றம் சாட்டினார்.
News January 15, 2026
மக்கள் நாயகன் காலமானார்.. பொங்கல் நாளில் அஞ்சலி

ராணுவ வீரர் பிரமோத் ஜாதவ், தனது மனைவியை பிரசவத்திற்கு அழைத்து சென்றபோது நிகழ்ந்த விபத்தில் கடந்த 5 நாள்களுக்கு முன்பு உயிரிழந்தார். பிரமோத்துடன் பணிபுரிந்த ராணுவ வீரர்கள் சங்கராந்தி நாளில், அவரது வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மேலும், பிரமோத்தின் போட்டோவுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பிரமோத் உடலுக்கு அவரது மனைவி <<18829931>>ஸ்டெச்சரில் சென்று இறுதி அஞ்சலி<<>> செலுத்தியிருந்தார்.


