News August 9, 2024

மோசடி நபர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

image

சேலம், அஸ்தம்பட்டியை சேர்ந்த பிரபாகரன் கோவை புதூர் பகுதியில் டேட்டா என்ட்ரி நிறுவனம் துவங்கி பல கோடி மோசடி செய்ததாக பேரூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் புகாரளிக்கப்பட்ட நிலையில், அவர் கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாகியுள்ளார். இவ்வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கின்றனர். இதுகுறித்த வழக்கை விசாரித்த கோவை நீதிமன்றம் வரும் ஆக.12க்குள் ஆஜராக உத்தரவிட்டது.

Similar News

News October 21, 2025

கோவை மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

image

மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 6. சாலை விபத்து அவசர சேவை – 1073 7.பேரிடர் கால உதவி – 1077 8. குழந்தைகள் பாதுகாப்பு – 1098 9.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 10.மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 21, 2025

கோவை: 1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை

image

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் bankofbaroda.bank.in எனும் இணையதளத்தில் வரும் அக்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.SHARE பண்ணுங்க

News October 21, 2025

உஷார்..கோவையில் வீடு தேடி வரும் அபராதம்!

image

கோவை மாநகராட்சியில் தினமும், 1,200 டன் வரையிலான குப்பை சேகரமாகிறது. இக்குப்பை, வெள்ளலுார் கிடங்கில் குவிக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே, பொது இடங்களில் குப்பையை வீசிவிட்டு செல்பவர்களின் வாகன பதிவு எண்ணை வைத்து, ரூ.1,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை, அபராதம் விதிக்கப்படும். இதனை அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வசூலிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!