News August 9, 2024
முதல் நாள் போட்டி – 2,000க்கு மேல் பங்கேற்பு

திருச்சி மாவட்ட தடகளசங்கம் சார்பில், திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று மற்றும் நாளையும் மாவட்ட தடகளப் போட்டிகள் நடக்கிறது. முதல் நாளான இன்று விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு, மற்றும் 18,20 வயதுக்கான 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர், 5000 மீட்டர் குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற போட்டிகள் நடைபெற்றன. இதில், சுமார் 2,000 பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.
Similar News
News October 22, 2025
திருச்சி: இந்திய அஞ்சல் துறையில் வேலை

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், IPPB வங்கியில் 348 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 29.10.2025
4. சம்பளம்: ரூ.30,000
5. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
7. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க
News October 22, 2025
திருச்சி மாவட்டத்தில் 975.5 மி.மீ பதிவு

திருச்சி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் தொடர்ச்சியாக கனமழையும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது அதேநேரம், திருச்சி பொன்னணிஆறு அணை பகுதியில் அதிகபட்சமாக 129.4 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 975.5 மி.மீ மழையும், சராசரியாக 40.65 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது.
News October 22, 2025
திருச்சி அருகே சோகம்: மின்னல் தாக்கி பலி

திருச்சி மாவட்டம், இருங்களூர் ஊராட்சி புறத்தாக்குடி பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவர் தனது வீட்டில் இரண்டு காளை மாடுகளை ஆசை ஆசையாக வளர்த்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்தது. இதில் எதிர்பாராத விதமாக காளைகள் மீது மின்னல் தாக்கியதில், 2 காளைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.