News August 9, 2024
அதிமுகவுக்கு சென்னை ஐகோர்ட் அனுமதி

சென்னை மாநகராட்சிக்கு எதிராக வடசென்னையில் போராட்டம் நடத்த அதிமுகவுக்கு அனுமதி அளித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. போரட்டம் நடத்த அனுமதி மறுத்ததை எதிர்த்து வடசென்னை அதிமுக நிர்வாகி கணேசன் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 10 மணக்குள் 30 நிமிடங்களுக்கு மட்டும் போராட்டம் நடத்தலாம் என அனுமதி அளித்துள்ளது.
Similar News
News January 15, 2026
சென்னை: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) சென்னை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.
News January 15, 2026
சென்னையில் SSI மீது பாய்ந்த அதிரடி உத்தரவு!

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் அதிகாலை ரவுடி ஆதி மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மூன்று பெண் காவலர்கள் உட்பட நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், நேற்று ஒரு எஸ்எஸ்ஐயும் சஸ்பெண்ட் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
News January 15, 2026
சென்னை: கடலில் குளித்த சிறுவன் மாயம்!

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் வினோத் (15). இவர் நேற்று கலை காசிமேட்டில் உள்ள கடலில் நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது கடலின் ஆழமான பகுதியில் குளித்த சிறுவன் அலையில் சிக்கி மாயமானார். தகவலறிந்து வந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் மீன்பிடித் துறைமுக போலீசார், நேற்று மாணவனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். உடல் கிடைக்காத நிலையில், இன்றும் உடலை தேடி வருகின்றனர்.


