News August 9, 2024
தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு

வார இறுதியில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக இன்று இரவு 11 மணிக்கு தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விழுப்புரம், சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக காலை 6.40 மணிக்கு திருச்சி சென்றடையும். மறுமார்க்கத்தில் ஞாயிறன்று( ஆக.11) இரவு 10.30க்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு காலை 5.50க்கு தாம்பரம் வந்தடையும்
Similar News
News August 16, 2025
செங்கல்பட்டு: கிருத்திகைக்கு போக வேண்டிய முருகன் கோயில்கள்!

ஆடிக் கிருத்திகை முருகனுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் பல புராதன முருகன் கோயில்களைக் கொண்டுள்ளது. அதில்,
▶️திருப்போரூர் கந்தசாமி கோயில்,
▶️செம்மலை முருகன் கோயில்,
▶️ஆனூர் கந்தசுவாமி கோயில்
▶️சாளுவன்குப்பம் முருகன் கோயில்
▶️செய்யூர் முருகன் கோயில் குறிப்பிடத்தக்கவை. செல்வ செழிப்பு & மகிழ்ச்சி பொங்க ஆடிக் கிருத்திகையில் இங்கு சென்று முருகனை வழிபடுங்க. ஷேர்!
News August 16, 2025
செங்கல்பட்டு: கோயில் விழாவில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!

செங்கல்பட்டு, அச்சிறுபாக்கம் அருகே ஆத்தூர் சமத்துவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகாந்த். இவர் நேற்று (ஆகஸ்ட் 15) மதியம் வெளியம்பாக்கம் கிராமத்தில் உள்ள முருகர் கோயில் திருவிழாவிற்கு, ஒலிபெருக்கி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அச்சிறுப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News August 16, 2025
ரயில்கள் தாம்பரத்திற்கு மாற்றம்

எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், கடந்த ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 18 வரை சில ரயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்நிலையில் கொல்லம் மெயில் மற்றும் குருவாயூர் விரைவு ஆகிய ரயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை தற்போது தாம்பரத்தில் இருந்து புறப்படும் நடைமுறையே தொடரும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.