News August 9, 2024

துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் இடையூறு: காங்கிரஸ்

image

துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி இடையூறு செய்வதாக தமிழக காங்.தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் செயல்பாடுகளை முடக்க, ஆளுநர்களை பாஜக பயன்படுத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா, மே.வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் ஆளுநர்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்படுவதாகவும் சாடினார்.

Similar News

News February 8, 2026

இனி சேப்பாக்கத்தில் விசில் போட முடியாது

image

NZ, AGF இடையேயான உலகக் கோப்பை போட்டி சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற நிலையில், மைதானத்திற்குள் விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. விசிலுக்கான தடை குறித்து ICC, BCCI தரப்பில் எந்த விதிமுறையும் இல்லை. ஆனால், உள்ளூர் கிரிக்கெட் வாரியம், போலீஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

News February 8, 2026

நகைக் கடன் தள்ளுபடி முடிவு.. வந்தாச்சு HAPPY NEWS

image

<<19007011>>கல்விக் கடன், மாற்றுத் திறனாளி கடன்<<>> போன்றவை தள்ளுபடி செய்யப்படும் என அதிமுக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. இந்நிலையில், கடந்த தேர்தலைப்போல், இப்போதும் நகைக் கடன் தள்ளுபடி அறிவிக்கப்படுமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதற்கான நடவடிக்கையை திமுக அரசு தொடங்கிவிட்டதாம். கூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் இருக்கும் நகைக் கடன் விவரம் சேகரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. விரைவில் நல்ல செய்தி வெளியாகும்.

News February 8, 2026

EV கார்களுக்கு ₹3.80 லட்சம் வரை தள்ளுபடி!

image

டாடா மோட்டார்ஸ் தனது EV கார்களுக்கு ₹3.80 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்து வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக TATA Curvv மாடலுக்கு, வேரியண்ட்களை பொறுத்து ₹3.80 லட்சம் – ₹3.30 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல் Harrier (₹1.5 லட்சம்), Punch (₹1.6 லட்சம்), Tiago (₹1.5 லட்சம்), மற்றும் Nexon (₹1.2 லட்சம்) ஆகிய மாடல்களுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!