News August 9, 2024

மாஸ் ஹீரோ அவதாரம் எடுக்கும் லோகேஷ் கனகராஜ்

image

மாநகரம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விஜய், கமல் என பெரிய ஹீரோக்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்து நட்சத்திர இயக்குநராக மாறினார். ரஜினியை வைத்து கூலி திரைப்படத்தை தற்போது அவர் இயக்கி வருகிறார். இந்நிலையில், சூரரைப்போற்று புகழ் சுதா கொங்கராவின் அடுத்த படத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம். இதுதொடர்பாக அவருடன் படக்குழுவினர் பேசி வருவதாக தெரிகிறது.

Similar News

News December 19, 2025

மயிலாடுதுறை: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் உதவி

image

மயிலாடுதுறை மக்களே மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.

News December 19, 2025

தங்கம் விலை சவரனுக்கு ₹480 குறைந்தது

image

கடந்த 3 நாள்களாக உயர்ந்து வந்த தங்கம் இன்று(டிச.19) பெரிய அளவில் சரிவைக் கண்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹60 குறைந்து ₹12,380-க்கும், சவரனுக்கு ₹480 குறைந்து ₹99,040-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிந்து வருவதன் எதிரொலியால் இந்திய சந்தையில் இன்று தங்கம் <<18609114>>விலை கணிசமாக குறையும்<<>> என ஏற்கெனவே WAY2NEWS செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

News December 19, 2025

அரசு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு!

image

வ்ஃப்ஃப்க்ஃப்ர் வரும் 22-ம் தேதி காலை 10 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையை நடத்த உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் திட்டமிட்டபடி ஜன.6-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ-ஜியோ அறிவித்திருந்தது.

error: Content is protected !!