News August 9, 2024

திருவள்ளூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 – 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 27, 2025

திருவள்ளூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்!

image

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் கிராம சுகாதார செவிலியர்களுக்கான மகப்பேறு மற்றும் குழந்தை நல பராமரிப்பு தொடர்பாக மாவட்ட அளவிலான பயிற்சிக் கூட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

News December 27, 2025

திருவள்ளூரில் மின் தடையா..? உடனே CALL!

image

திருவள்ளூர் மக்களே… தற்போது பெய்துவரும் மழையால் உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் (Service Number), இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும். அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். உடனே ஷேர் பண்ணுங்க!

News December 27, 2025

திருவள்ளூரில் சக்கரை நோயா..? முக்கிய அறிவிப்பு!

image

திருவள்ளூர் மக்களே…, நிங்களோ அல்லது உங்கள் நண்பரோ சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவரா? அதீத சர்க்கரை அளவால் கால்களில் காயம், பாதிப்பு உள்ளதா? கவலை வேண்டாம், தமிழக அரசின் ‘பாதம் காக்கும் திட்டம்’ உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு இலவச பரிசோதனை, அறுவை சிகிச்சை போன்றவை வழங்கப்படுகின்றன. இதற்கு மாவட்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகலாம். உடனே பாதிக்கப்பட்ட நண்பர்களுக்கு SHARE

error: Content is protected !!