News August 9, 2024
தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 9,779 மாணவர்கள் பயன்

மதுரையில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் “தமிழ்ப்புதல்வன்” திட்டத்தை இன்று அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார். தமிழ்வழியில் பயின்று, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை அளிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தில் மதுரை மாவட்டத்தில் முதற்கட்டமாக 9,779 மாணவர்கள் பயன்பெற உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 29, 2025
மதுரையில் உலக சிலம்ப சாதனை நிகழ்ச்சி

மதுரைக் கல்லுாரியில் அசார் சல்மான் சிலம்ப மையம் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு உலக சிலம்ப சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. சிலம்ப மையத்தைச் சேர்ந்த 20 மாணவர்கள், 79 வகையான சிலம்ப சுற்றுமுறையை ஒன்றரை மணி நேரம் செய்து, சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்து அனைவரின் கவனத்தை ஈர்த்தனர். பயிற்சியாளர் அசாருதீன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
News August 29, 2025
மதுரை இளைஞர்களுக்கு குட் நியூஸ் உடனே விண்ணப்பிங்கள்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மரம் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு தொடர்பான பயிற்சி வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது இதன் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் பயிற்சி பெற 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
News August 29, 2025
மதுரை: தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தின் கீழ் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் தீபாவளி பண்டிகை மற்றும் பண்டிகை தொடர் விடுமுறை முன்னிட்டு எட்டு ரயில்களின் சேவையை ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் முன்பதிவு செய்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க