News August 9, 2024
தமிழக மீனவர்கள் இந்தியர்கள் கிடையாதா?: EPS

தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக இபிஎஸ் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். “தமிழக மீனவர்களும் இந்தியர்கள்தான் என்பதை மத்திய அரசு நினைவில் கொள்ள வேண்டும். எனவே அவர்களை விடுவிக்குமாறு, இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார். எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
Similar News
News August 14, 2025
கன்னட நடிகர் தர்ஷனை கைது செய்ய உத்தரவு

கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமினை ரத்து செய்து உச்ச நீதிமன்றம்(SC) உத்தரவிட்டுள்ளது. ரசிகர் ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷனுக்கு கர்நாடக ஐகோர்ட் ஜாமின் வழங்கியது. இதை எதிர்த்து SC-ல் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த SC சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் ஜாமினை ரத்து செய்ததோடு, உடனடியாக தர்ஷனை கைது செய்ய ஆணையிட்டுள்ளது.
News August 14, 2025
தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

CM ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் DCM உதயநிதி ஸ்டாலின் உட்பட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். இதில் புதிய தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளது. முக்கியமாக ஆணவக் கொலைகளை தடுக்க புதிய சட்டம் இயற்றலாமா என்பது குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News August 14, 2025
ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஹாக்கி வீரர் காலமானார்

இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸின் தந்தை வெஸ் பயஸ் (80) காலமானார். இவர், 1972 ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்றவர் ஆவார். உடல்நலக் குறைவு & வயது மூப்பு காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் இன்று காலை காலமானார். இவரது மறைவுக்கு முன்னாள் இந்திய ஹாக்கி அணி கேப்டன் வீரேன் ரஷ்குயின்ஹா உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.