News August 9, 2024
பர்கூரில் தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசுப் பொறியியல் கல்லூரியில் தமிழ்புதல்வன் திட்டத்தின் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு இன்று வங்கி டெபிட் கார்டுகளை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். இந்நிகழ்வின்போது பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் Y. பிரகாஷ், மாவட்ட ஆட்சியர் சரயு, ஆசிரியர்கள், கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் உடனிருந்தனர்.
Similar News
News August 28, 2025
கிருஷ்ணகிரியில் அரசு வேலை… 77 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கியில் உள்ள 2,581 உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் கிருஷ்ணகிரியில் மட்டும் 77 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்த 18-50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.19,850- 96,395 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு <
News August 28, 2025
கிருஷ்ணகிரியில் பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு குடும்ப வருமானம் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17539760>>தொடர்ச்சி<<>>
News August 28, 2025
கிருஷ்ணகிரி: பெண் பிள்ளை உள்ளதா? APPLY NOW! (2/2)

இந்த திட்டத்தில் பயன்பெற குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பெற்றோரில் ஒருவர் 40 வயதிற்குள் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். மேலும், வருமானச் சான்றிதழ், பெண்குழந்தைக்கான பிறப்புச் சான்றிதழ், கருத்தடை சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். SHARE