News August 9, 2024
திருச்சியில் 12,655 மாணவர்கள் தேர்வு

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில், தமிழ்நாடு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு தமிழ் புதல்வன் திட்டத்தினை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வங்கி அட்டையை வழங்கினார். இந்த திட்டத்தில் திருச்சி மாவட்டம் முழுவதும் முதற்கட்டமாக 123 கல்லூரிகளைச் சேர்ந்த 12,655 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News December 29, 2025
திருச்சியில் வேலை – ஆட்சியர் அறிவிப்பு!

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில், 2 ஓடி டெக்னீசியன், 3 செக்யூரிட்டி, ஒரு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், ஒரு துப்புரவு பணியாளர், ஒரு முதுநிலை ஆய்வக நுட்புநர், ஒரு ஓட்டுநர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் புத்தூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை முதல்வரிடம் வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News December 29, 2025
திருச்சி மைய நூலகத்தில் குரூப்-4 மாதிரி தேர்வு

திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கட்டணமில்லா மாதிரி தேர்வு இன்று (டிச.29) காலை 10 – 1.30 மணி வரை நடைபெற உள்ளது. இதில், முழு பாடப்பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம் பெறும். தேர்வுக்குப்பின் மதிப்பெண்கள் உடனடியாக தெரிவிக்கப்பட்டு, அதிக மதிப்பெண் பெறும் முதல் மூவருக்கு முறையே ரூ.500, ரூ.400, ரூ.300 ஊக்கப்பரிசு வழங்கப்படும் என மாவட்ட நுாலக அலவலர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.
News December 29, 2025
திருச்சி மைய நுாலகத்தில் குரூப் 4 மாதிரி தேர்வு

திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கட்டணமில்லா மாதிரி தேர்வு டிச.29ம்தேதி (திங்கள் கிழமை) காலை 10 – 1.30 மணி வரை நடைபெற உள்ளது. முழு பாடப்பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம் பெறும். தேர்வுக்குப்பின் மதிப்பெண்கள் உடனடியாக தெரிவிக்கப்பட்டு, அதிக மதிப்பெண் பெறும் முதல் மூவருக்கு முறையே ரூ.500,ரூ.400,ரூ.300 ஊக்கப்பரிசு வழங்கப்படும் என மாவட்ட நுாலக அலவலர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.


