News August 9, 2024
வேலூரில் ரூ.1.40 கோடி அபராதம்

வேலூர் மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.1 கோடியே 40 லட்சத்து 56 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக 89,235 வழக்குகள், சீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதாக 6,436 வழக்குகள் உள்பட பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதாக 1,50,534 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News August 21, 2025
இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்

தமிழ்நாடு அரசு இ- ஸ்கூட்டர் மானியம் பெற ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம், பணிபுரியும் நிறுவனத்தின் சான்றிதழ், வங்கி பாஸ்புக்கின் முதல் பக்கம், நலவாரிய அட்டை போன்றவை தேவை. ஏற்கனவே பெட்ரோல் பைக்குகள் வைத்திருந்தாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம். உணவு பொருள் டெலிவரி செய்யும் இளைஞர்களுக்கு உதவும் திட்டம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News August 21, 2025
வேலூரில் இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்

தமிழ்நாடு அரசு ஆன்லைன் டெலிவரி செய்யும் இளைஞர்களுக்காக இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்கி வருகிறது. இதன் மூலம் இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் பெறலாம். மானியத்தைப் பெற, தமிழ்நாடு இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். <
News August 21, 2025
வேலூர்: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு

வேலூர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இதைப்பெற ▶️குடும்ப அட்டை ▶️வருமானச் சான்று ▶️ குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட சான்றுகளுடம் வேலூர் ஆட்சியர் அலுவலகம் அல்லது உங்களுடன் ஸ்டாலின் <