News August 9, 2024

BREAKING: வங்கிக் கணக்கில் ₹1000 வந்தது

image

அரசுப் பள்ளியில் 6-12ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் திட்டத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, சுமார் 3.28 லட்சம் மாணவர்களின் வங்கிக் கணக்கில் ₹1000 செலுத்தப்பட்டுள்ளது. பொருளாதார வசதி குறைவால், உயர்கல்வி தொடர முடியாதவர்களுக்கு இத்திட்டம் உதவிகரமாக இருக்கும். இதனால், உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அரசு கூறியுள்ளது.

Similar News

News August 23, 2025

‘புலவர்’ அவதாரம் எடுத்த பாரதிராஜா

image

இயக்குநர் பாரதிராஜா நடிக்கும் புதிய படத்திற்கு ‘புலவர்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் படத்தின் பர்ஸ்ட் லுக்கை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரவி முருகையா இப்படத்தை இயக்குகிறார். ‘புலவர்’ படம் க்ரைம் கதைக்களத்தை மையமாக கொண்டது. ‘கடைசி விவசாயி’ படத்தை தயாரித்த சூப்பர் டாக்கீஸ் நிறுவனமே இப்படத்தையும் தயாரித்துள்ளது. விரைவில் புலவரை திரையரங்குகளில் எதிர்பார்க்கலாம்.

News August 23, 2025

கடன் வாங்கி கல்யாணம் பண்ணாதீங்க பாஸ்!

image

4 ஆண்டுகள் கடுமையாக உழைத்து குடும்பக் கடனை அடைத்தார் சென்னையை சேர்ந்த இளைஞர். இனி ரிலாக்ஸ் ஆகலாம் என நினைத்தவருக்கு, காத்திருந்தது அதிர்ச்சி. ஆம், ஊரையே கூட்டி, அவருக்கு தடபுடலாக கல்யாணம் செய்தனர் பெற்றோர். அதற்கு ₹17 லட்சம் கடன் வாங்கினார்களாம். இப்போது அந்த கடனை அடைக்க ஓயாது ஓடிக் கொண்டிருக்கும் அவர், ‘கல்யாணம் பண்ண இப்படி பணத்தை வேஸ்ட் பண்ணாதீங்க’ என அட்வைஸ் செய்துள்ளார். உங்க அனுபவம் எப்படி?

News August 23, 2025

TN விவசாயிகளுக்காக பேசிய கவர்னர் RN ரவி!

image

டெல்லியில், மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானை சந்தித்த கவர்னர் RN ரவி, TN விவசாயிகள், கைவினை கலைஞர்களுக்காக கோரிக்கை விடுத்ததாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கவர்னர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக போட்டி அரசு நடத்துவதாக திமுக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், விவசாயிகளின் நலனுக்காக மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததாக கூறியுள்ளார். உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!