News August 9, 2024
BREAKING: சவுக்கு சங்கர் வழக்கில் தீர்ப்பு

சவுக்கு சங்கரின் குண்டர் சட்டத்தை ரத்து செய்து ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. தொடர்ந்து அவதூறு கருத்துகள் தெரிவிப்பதை தடுக்கும் வகையில் சவுக்கு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இதை எதிர்த்து தாய் கமலா தொடர்ந்த வழக்கில், சவுக்கு சங்கர் கருத்தால் பொது அமைதிக்கு குந்தகம் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறி, வேறு வழக்குகளில் ஜாமின் பெற தேவையில்லையென்றால், அவரை உடனே விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.
Similar News
News November 3, 2025
நீதிமன்றத்தை நாடுகிறார் செங்கோட்டையன்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து செங்கோட்டையன் இன்று நீதிமன்றத்தை நாட திட்டமிட்டுள்ளார். நோட்டீஸ் கூட வழங்காமல் கட்சி விதிகளை மீறி கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக செங்கோட்டையன் குற்றஞ்சாட்டினார். ஆனால், கட்சி விதிகளின் அடிப்படையில்தான் நீக்கப்பட்டதாக இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் நேற்று இரவு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்த செங்கோட்டையன், இன்று வழக்கு தொடரவிருக்கிறார்.
News November 3, 2025
அனைத்து மாவட்டத்திற்கும் HAPPY NEWS

தாயுமானவர் திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று முதல் வீடு தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன. மூத்த குடிமக்களுக்கான வயது 70-ல் இருந்து 65-ஆக தளர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் முதல் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு, நவ.3 – 6-ம் தேதி வரை வழங்குவதாக TN அரசு அறிவித்துள்ளது.
News November 3, 2025
தென்னாப்பிரிக்காவை விடாத சோகம்!

உலகக்கோப்பையை வெல்ல முடியாத தென்னாப்பிரிக்காவின் சோகம் தொடருகிறது. 2023 & 2024 மகளிர் T20 WC, 2024 ஆண்கள் T20 WC, 2025 மகளிர் ODI என கோப்பை கனவை 4 முறை நெருங்கிய போதும், ஏமாற்றமே மிஞ்சியது. இதில் இருமுறை(2024 ஆண்கள் T20 WC & 2025 மகளிர் ODI) இந்தியா அந்த கனவை உடைத்தது. இந்த ஆண்டு நடைபெற்ற WTC கோப்பையை மட்டும் தென்னாப்பிரிக்கா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. என்ன பண்றது சோகமா தான் இருக்கு!


