News August 9, 2024
நாகையில் இலங்கை மீனவர்கள் மீட்பு

இலங்கையை சேர்ந்த அகமது இர்பான் மற்றும் அஸ்டின் 20 நாட்களுக்கு முன்பு பைபர் படகில் மீன் பிடிக்க புறப்பட்டுள்ளனர்.படகு பழுதால் இருவரும் கடலில் தத்தளித்துள்ளனர்.உணவில்லாமல் அகமது இர்பான் படகில் மயங்கியுள்ளார். அப்போது இந்திய – இலங்கை கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்கள் அவர்களை மீட்டு கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News October 19, 2025
நாகைக்கு மழை எச்சரிக்கை!

வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.19) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மின்னல் தாக்கும் நேரங்களில் மக்கள் திறந்தவெளி மற்றும் மரங்களின் கீழ் நிற்காமல் தவிர்ப்பது நல்லது
News October 19, 2025
நாகையில் சாலை மறியல் போராட்டம்

நாகை மாவட்டம் வாழக்கரையில் நேற்று(அக்.18) இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் (DPC) TNCSC தாளடி நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து, K.சித்தார்த்தன் தலைமையில் இந்திய மார்க்சிஸ்ட் கட்சியினஎ சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்,. இதில் விவசாயிகள், பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
News October 19, 2025
நாகை: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

நாகை மாவட்டத்தில் 18 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!