News August 9, 2024
6 நாட்களுக்கு மழை கொட்டும்

தமிழகத்தில் இன்று முதல் 14ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 11ஆம் தேதி கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது. வருகிற 12ஆம் தேதி நீலகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூரில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது.
Similar News
News January 12, 2026
திமுகவை அகற்ற பாஜக தலைவர்களுக்கு அட்வைஸ்

உள்ளூர் பிரச்னையை கையில் எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டால் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று பாஜக தலைவர்களுக்கு தேசிய செயல் தலைவர் நிதின் நபின் அட்வைஸ் கொடுத்துள்ளார். சனாதன தர்மம், ராமருக்கு எதிராக செயல்பட்ட விரோத சக்தியை முழுமையாக தோற்கடிக்க வேண்டும் எனக் கூறிய அவர், கோவை மண்டலத்தில் பூத் வாரியாக சிறப்பான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது பாஜகவுக்கு வெற்றியை தேடித் தரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
News January 12, 2026
ராசி பலன்கள் (12.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News January 12, 2026
செயலிழந்தவர் போல் விஜய் இருக்கிறாரா? கஸ்தூரி

‘ஜன நாயகன்’ விவகாரத்தில் விஜய் மெளனமாகவே இருப்பது பல்வேறு அரசியல் கேள்விகளுக்கும் வித்திட்டுள்ளது. இந்நிலையில், கரூரில் 41 பேர் இறந்து 4 நாள்களுக்கு பிறகு யோசித்து பேசிய விஜய், அவர் படத்துக்கு ஒரு பிரச்னை வந்தாலும் பேசாமலே உள்ளதாக கஸ்தூரி சாடியுள்ளார். விஜய்யை பாதிக்கப்பட்டவராக பார்ப்பதா, செயலிழந்தவராக பார்ப்பதா என தெரியவில்லை என்றும் அவர் வினவியுள்ளார். உங்கள் கருத்து என்ன?


