News August 9, 2024
புதுச்சேரி: 62 பவுன் தங்கம் கொள்ளை; 7 பேர் கைது

காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி கனகவள்ளி ஜூலை 22-ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 3 மர்ம நபர்கள் கனகவள்ளியை தாக்கி 62 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். இதனைத் தொடர்ந்து மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று சிறுவன் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 32 பவுன் தங்க நகைகள், 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
Similar News
News August 12, 2025
புதுவை: பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

பொதுத்துறை நிறுவனமான ‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்’ காப்பீடு நிறுவனத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள இன்ஜினீயர்கள், ஐ.டி நிபுணர்கள் உள்ளிட்ட 550 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E / B.Tech மற்றும் ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இங்கே <
News August 12, 2025
புதுவையில் இன்று இந்தப் பகுதிகளுக்கு மின்தடை!

புதுவை, சேதராப்பட்டு துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இன்று (ஆக.12) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சேதராப்பட்டு தொழிற்பேட்டை மேற்குப் பகுதி, கிழக்குப் பகுதி, பழைய காலனி, புதிய காலனி, சேதராப்பட்டு கிராமம், முத்தமிழ் நகர், கரசூர், கரசூர்பேட், கரசூர் – வானுார் சாலை, துத்திப்பட், உயர் மின்னழுத்தத் தொழிற்சாலைகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.
News August 11, 2025
புதுச்சேரியில் ரெஸ்டோ பார்களுக்கு சீல் வைத்த கலால் துறை

புதுச்சேரியில் ரெஸ்டோ பார் கொலை எதிரொலியாக, புதுச்சேரி நகர பகுதியில் இயங்கி வரும் ரெஸ்டோ பார்களின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நேர கட்டுப்பாட்டை மீறி இயங்கிய 13 ரெஸ்டோ பார்களின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து புதுச்சேரி அரசு கலால் துறை சீல் வைத்துள்ளது.